40 வயது முன்னணி நடிகையை திருமணம் செய்யும் நடிகர் வினய் !! அதுவும் இந்த நடிகையா ?? உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

கிசுகிசு

நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய் (42) பின்னர் ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வினய் கடந்த சில ஆண்டுகளாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். இந்த காதல் பறவைகள் மாலத்தீவு உட்பட பல்வேறு இடங்களில் விடுமுறையை கழித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் வினய் மற்றும் விமலா (40) விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் திருமண திகதியை அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள விமலா ராமன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.