படுக்கை அறையில் வெங்காயம் வெட்டி வைத்தால்… இது மந்திரம் இல்ல… மருத்துவம்!

உணவே மருந்து

படுக்கை அறையில் வெங்காயத்தை வெங்காயத்தை வெட்டி வைத்தால் பல விதமான நோய்களும் கூட குணமாகும். மந்திரம்.. இது என்ன மந்திரம் என்கிறீர்களா…? அட இது மந்திரமல்ல. மருத்துவம். அப்படி என்ன நடக்கும்னு தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1919-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த ஆண்டில் பரவிய ஒரு காய்ச்சலால் கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். இதைப் பார்த்த மருத்துவ உலகமே குழப்பத்தில் இருந்தது.

ஆனால் ஒரு ஏழை விவசாயியியின் குடும்பத்தை மட்டும் இந்த காய்ச்சல் தீண்டவில்லை. இது மருத்துவர்கள் அனைவருக்கும் வியப்பைத் தந்தது. அந்த ஏழை விவசாயியின் வீட்டுக்கு மருத்துவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகள் இருந்தது.

இதைப் பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சர்யமாக இருந்தது. இதைப் பற்றி அவர்களிடம் கேட்ட போது அந்த விவசாயி, நாங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் இப்படி வெங்காயத்தை இரவில் வெட்டி வைத்து விட்டு, காலையில் அதனை தூக்கி எறிந்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்.

பிறகு அந்த மருத்துவர்கள் அந்த வெங்காயத் துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அதில் ஏராளமான பாக்டீரீயாக்கள் இருந்தன. அதாவது அந்த அறையில் இருந்த அனைத்து கெட்ட பாக்டீரீயாக்கள் மற்றும் வைரஸை அது ஈர்த்து இருந்தது அவர்களுக்கு தெரியவந்தது.

இதேபோல் தூங்கும் முன் பெரிய வெங்காயத்தை இரண்டு துண்டாக வெட்டி தலைமாட்டில் வைத்து கொண்டு உறங்கினால் அந்த அறையில் இருக்கும் பாக்டீரீயா, வைரஸை வெங்காயம் உறிஞ்சி விடும். இதை மட்டும் தவறாமல் செய்து பாருங்க. அப்புறம் எந்த விதமான நோய்கிருமிகளும் உங்களை அண்டவே அண்டாது. மறக்காம செய்து பாருங்க.