திரையுலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் து ணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் மீண்டும் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் அஜித்துடன் எப்படிப்பட்ட கதைக்களத்தில் உள்ள படத்தில் நடிப்பீர்களா. விஜய்யுடன் எப்படிப்பட்ட கதைக்களத்தில் உள்ள படத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன் ‘ விஜய் சாருடன் ரொ மான்டிக் படம். அஜித் சாருடன் மாஸ் என்டர்டைனர் திரைப்படம். என்று ஓப்பனாக கூறியுள்ளார். அஜித்துடன் மாஸ் படம் என்று கூறிய பிரியங்கா, விஜய்யுடன் மட்டும் ரொ மான்ஸ் படம் என்று கூறியுள்ளது, அவர்களின் வயதை குறிப்பிட்டு தானா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.