தன்னை விட வயதில் மூத்த நடிகைக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் சூர்யா!! ஏற்கனவே அவங்க பொண்ணு கூட ஜோடி போட்டு இருந்தாச்சு… இப்போ அவங்க அம்மாவா??

செய்திகள்

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜெய் பீ”ம் பெரியளவில் பேசப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

மேலும் இந்நிலையில் அடுத்ததாக சூர்யா பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாலா இயக்கத்தில் கடைசியாக சூர்யா “பிதாமகன்” படத்தில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா பாலா புதிதாக இணையவுள்ள படத்தில் சூர்யா மற்றும் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு கதாபாத்திரங்களிலிலும் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா வ யதான தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹேமமாலினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யா ஹேமாலினியின் மகளான ஈஷா தியோல் உடன் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.