விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” பிரபலத்துடன் காதலா?…. உண்மையை ஓபனாக போட்டுடைத்த குக் வித் கோமாளி ஷிவாங்கி…!என்ன சொன்னார் தெரியுமா??

கிசுகிசு

அப்படி துறுதுறு பெண்ணாக குக் வித் கோமாளி செட்டையே கலக்கும் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் சிங்கர் பிரபலமான சாம் விஷாலை காதலிகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி.

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலக்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஷிவாங்கி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூட “எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லையே என ஷிவாங்கியை பார்க்கும் போதும் தோணும் என புகழ்ந்தார்.

அப்படி துறுதுறு பெண்ணாக குக் வித் கோமாளி செட்டையே கலக்கும் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் சிங்கர் பிரபலமான சாம் விஷாலை காதலிகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி, அவர் என்னுடைய நல்ல நண்பர். எதுவாக இருந்தாலும் அவருடன் பகிர்ந்து கொள்வேன். வெளியே சென்றாலும் அவரது நண்பர்களையும் அழைத்துச் செல்வேன். நிறைய பேர் இன்ஸ்டாகிராமில் என்னிடம் அப்படி இருக்குமோ? என கேட்கிறார்கள். அப்படி இல்லவே இல்லை என கூறியுள்ளார்.