பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் பஞ்சாயத்து தான் ஓயாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
இரண்டு நாட்களாக வெளியாகும் ப்ரோமோவில் கூட, இவர்களது பஞ்சாயத்தை தான் போட்டுக்காட்டி கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி விட்டாலும் அனிதா விடுவதாக இல்லைசுரேஷ் சக்கரவர்த்தி எது செய்தாலும் அவர் கேமராமாவில் வர பார்க்கிறார் அதனால்தான் அடிக்கடி இப்படி செய்கிறார் என்று அனிதா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி பேசிக்கொண்டு இருக்கும் போது அனிதா சம்பத் நடுவிரலை காட்டியதாக நெட்டிசன்கள் ஊதிய குழு ஒன்றை கிளப்பியிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அனிதா சம்பத் அப்படி செய்தாரா இல்லை எதர்ச்சியாக அவர் செய்ததை நெட்டிசன்கள் இப்படி திரித்து பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.
விரலை நீட்டி காட்டுவது.. எதேச்சையா? எச்சரிக்கையா?…🙄🙄 #AnithaSampath #SureshChakravarthy #BiggBossTamil4 #BiggBoss4Tamil pic.twitter.com/x3S5wBoWdh
— Gabriella FC (@Gabriella_army1) October 8, 2020