கோடி கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் கூட கல்யாணத்துக்கு அம்மா கட்டிய சேலையுடன் வந்த இளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

32 வருடங்களுக்கு பின்னர் தனது அம்மாவின் புடவையை உடுத்தி தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றார் பிரபலமான நடிகை. இந்த செயல் மூலமாக பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றார்.

தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி அதிகமாக தெலுங்கு ரசிகர்களை கவனத்தை பெற்று இருந்தது.

இந்த போட்டோவினை பகிர்ந்து இருந்த அவர் அதனுடன் சேர்ந்து ஒரு சுவாரசியமான தகவலையும் கூறி இருந்தார். 32 வருடங்களுக்கு முன்பு தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் சேலையினை அணிந்து கொண்டு இந்த நிகழ்வினை நடத்துவது அவருடனே இருந்து நடத்துவது போன்ற உணர்வு தான் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார். நிச்சயதார்த்தத்தின் போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.