உடலில் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணம் என்ன? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்…!!

உணவே மருந்து

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று.

பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலை தருவதில்லை. இருப்பினும் சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன.

இதன் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால்,நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.

தற்போது சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்? இதன் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப அறிகுறிகள் என்ன?

பொதுவாகவே சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறி.

* சிறுநீரின் நிறமும் மாறும்.

*அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம்.

*உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படும்.

*சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும்.

சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள் என்ன?

பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது.

*இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது.

*குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது

யாருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர்.

அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவர்களுக்கு ஏற்படலாம்.

மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்ற செயல்களால் கூட சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *