99% பெண்கள் அக்குளில் இருக்கும் கருமையை போக்க இந்த இயற்கையான வழியைத்தான் பின்பற்றுகிறார்களாம்..! என்ன வழி தெரியுமா..?

உணவே மருந்து

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் பி ரச்சனைகளில் ஒன்று அக்குள் பகுதியில் இருக்கும் கருமை. மாடர்ன் உடை அணியும் பெண்களுக்கு இந்த கருமை மிகவும் சங்கடமான சூழலை தரும்.

இதுபோன்ற கருமையை நீங்க ரசாயனம் கலந்த பொருட்களை விட இயற்கையாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் தீர்வு காண முடியும்.

கற்றாழை ஜெல்லை 2 டீஸ்பூன் கிராம் மாவு, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை மஞ்சள் இவற்றை கொண்டு வேண்டும். பின்னர் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து இந்த கலவையில் கலந்து ஒரு பேஸ்ட் போல் உருவாக்க வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்டை அக்குள் பகுதியில் கருமையாக உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது காய்ந்ததும், நீங்கள் கசக்கிய அரை துண்டுகளாக்கப்பட்ட எலுமிச்சையை தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதுபோன்று வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.