90களில் ஜாக்லேட் பாயாக வளம் வந்த நடிகர் அப்பாஸ் சினிமாவை விட்டு விலக இது தான் காரணம்?

செய்திகள்

90களில் ஜாக்லேட் பாயாக பல நடிகர்கள் இருந்த போதிலும் தனக்கென ஒரு நடிப்பை வைத்து கொண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் படத்தில் ஆரம்பித்து, அடுத்தடுத்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிஸி நடிகராக திகழ்ந்தார்.

மேலும் இதையடுத்து கடைசியாக தமிழில் கோ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தும் வந்தார். அதற்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி எங்கே போனார் என்று தேடும் நிலையில் இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் என்று கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டு சினிமாவில், தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.