வியட்நாமைச் சேர்ந்த நுயென் வான் சைன்(92) என்ற முதியவர் தனது முடியை 80 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்த்து வருகின்றார்.
வியட்நாமில் மீகாங் டெல்டா பகுதியைச் சேர்ந்தவர் நுயென் வான் சைன்(92). இவர் தனது தலைமுடியை 5 மீற்றர் நீளத்தினையும் தாண்டி வளர்த்து வருகின்றார்.
முடியை வெட்டினால் தான் இறந்துவிடுவேன் என்பது தனது நம்பிக்கை என்றும் பிறப்பால் தனக்கு கிடைத்த எதையும் மாற்ற தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இதுவரை தான் தலை சீவியது கூட கிடையாது. முடியை வளர்ப்பது மட்டுமே எனது வேலை. பார்ப்பதற்கு சுத்தமாகவும், நன்றாகவும், உலர்ந்து இருப்பதற்காகவும் ஒரு துணியை மட்டும் தலையில் கட்டிக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.