67 வகையா..!!! அம்மாடியோவ்… உலகத்துல இப்படியொரு மாமியாரா?… மருமகனுக்கு செய்த சிறப்பான சம்பவம் வாங்க பாக்கலாம்..!!

செய்திகள்

ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டுக்கு வரும் தனது மருமகனுக்காக தன் கையாலேயே 67 வகை உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்கு அளவே இருக்காது என்பார்கள். அதை உண்மை என நிரூபித்திருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர்.

வீட்டுக்கு வருகை தரும் மருமகனுக்காக 67 வகை உணவுகளை தன் கையாலேயே சமைத்து அசத்தி இருக்கிறார் அவர். பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு ஐட்டங்களை நிரப்பி வைத்துவிட்டார்.

இது தவிர பாயாசம், ஸ்வீட்ஸ், சாட் ஐட்டம்ஸ், பீடா என மொத்த 67 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்காக சமைத்து அசத்தி இருக்கிறார் அந்த பெண். இவை அனைத்தையும் அந்த பெண்ணே தன் கையால் சமைத்து இருக்கிறார் என்பது தான் ஹைலைட்.

இந்த விஷயங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் அந்த பெண் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அசந்துபோன நெட்டிசன்கள், அவரது பதிவை வைரலாக்கி மனைவிகளையும், மாமியார்களையும் பல மருமகன்கள் கலாய்த்து வருகின்றனர்.