16 வயதில் பாடசாலை இடைவிலகினார்.17 வயதில் ஏற்கனவே செய்த நான்கு வேலைகளையும் இழந்தார்.
18 வயதில் திருமணம் முடித்தார்.18இலிருந்து 22 வரை வீதி ஒப்பந்தக்காரராக தோல்வியடைந்தார்.
இராணுவத்தில் இணைந்து இடை நிறுத்தப்பட்டார்.சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார்.
காப்புறுதி விற்பனையாளராகவும் மீண்டும் தோல்வி துரத்தியது.19 வயதில் தந்தையாகினார். 20 வயதில் மனைவி இவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் சென்றுவிட்டார்.
சிறு உணவகம் ஒன்றில் சமையலாளராகவும் பாத்திரம் கழுவுபவராகவும் வேலை செய்தார்.
சொந்த மகளைக் கடத்துவதன் மூலம் மனைவி மீண்டும் தன்னிடம் வருவார் என எண்ணி முயற்சிசெய்து தோல்வியடைந்தார்.65 வயதில் ஓய்வு பெற்றார்.
ஓய்வூதியமாக 105$ மாத்திரமே அரசிடமிருந்து கிடைத்தது.அரசு இவ்வளவு குறைவாக தனக்கு அளித்ததை நினைத்து மனம் உடைந்து போனார். ஒன்றுமே சரியாக வரவில்லை என்று தற்கொலை முடிவுக்குச் சென்றார்.
மரம் ஒன்றின் அடியிலிருந்து தற்கொலை கடிதம் எழுதும் போது தன் வாழ்வில் தான் எதையும் சாதிக்கவில்லை என்பதை கண்டுகொள்கிறார்.

மற்றவர்களை விட தான் எதனை சிறப்பாக செய்கிறேன் என்பதை கண்டறிந்தார். அது தான் எப்படி வறுத்த கோழி இறைச்சி சமையல் செய்வது? 87$ காசோலை கடனாக வாங்கி வீடு வீடாக சென்று தனது கென்டகி நண்பர்களுக்கு விற்பனை செய்தார்.65வயதில் த ற்கொ லைக்கு முயன்ற கொலனல் சாண்டர்ஸ் 88ஆவது வயதில் K.F.C பேரரசின் ஸ்தாபகர் பில்லியனராக….!
கதையின் கருத்து – இப்போதும் காலம் போய்விடவில்லை. உங்களது பார்வை தான் முக்கியமான விடயம். எப்போதும் நீங்கள் விட்டுக்கொடுக்காமல் முயன்று கொண்டு இருக்க வேண்டும். உங்களை எது சாதனையாளனாக்குமோ அதை தெரிவு செய்யுங்கள். அதன்வழி செல்லுங்கள். அதில் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துங்கள். புகழடைய வலிமையடைய சாதிப்பதற்கு வயது கிடையாது.
விடாமுயற்சியுடன் முயலும் நபர்களுக்குப் பகிர்ந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
நீங்களும் சாதியுங்கள்.