மனிதர்களை விட விலங்குகள் அதிக பாசத்தை கொண்டிருக்கும். அப்படி கண்கலங்க வைக்கும் கன்று ஒன்றின் பாசம் காண்போரை கலங்க வைத்திருக்கிறது.6 அறிவு மனுஷனுக்கு பாசம் இருக்கோ இல்லையோ? 5 அறிவு ஜீவனுக்கு கொஞ்சம் அதிகம் தான்..முதலாளியின் மரணத்தை கண்டு கதறி அழுத கன்று குட்டி – காண்போரை கண்கலங்க வைத்த வீடியோ!
ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த தனது முதலாளியின் உடலைப் பார்த்து அழத் தொடங்குகிறது இந்த கன்று.அவரது உடலை அடக்கம் செய்ய கிராமவாசிகள் பலர் இடுகாட்டிற்கு வந்துள்ளபோது தனது முதலாளியின் மரணத்தால் மிகுந்த துயரத்துக்கு ஆளான அவரது செல்லக் கன்றும் மயானத்தை அடைந்தது.
மேலும், இறந்த தனது முதலாளியின் உடலைப் பார்த்து சத்தமாக அழ ஆரம்பித்தது. கன்றுக்குட்டிக்கு தனது முதலாளியின் மீதுள்ள பாசத்தை கண்டு ஊர் மக்களும் அந்த வாயில்லா ஜீவனைக் கொண்டு இறுதிச்சடங்குகளை செய்ய வைத்தனர்.இந்த காட்சியானது அங்கு இருப்போரை மட்டுமின்றி காண்போரையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.
झारखंड के हजारीबाग में मालिक की मौत पर श्मशान पहुंचा पालतू बछड़ा; चेहरा देखने के लिए मुंह से हटाता रहा कफन, गांववालों ने बछड़े से करवाया अंतिम संस्कार#Jharkhand #BreakingNews pic.twitter.com/zYLZPGJSjI
— shakti ojha🇮🇳 (@imShaktiojha) September 15, 2022