55 வயதை கடந்தும் 600 திரைப்படங்களுக்கு மேலே நடித்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபல நடிகை!! அட இவர் தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுடனும் நடித்த நடிகையாச்சே!! யார் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவை பொருத்த வரை தற்போது புதிது புதிதாக நிறைய நடிகர் நடிகைகள் அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்களிடம் இதற்கு முன்னால் இருந்த ஜன்ரேஷன் அதாவது 1970 லிருந்து 2000 உள்ளே சினிமா துறையில் நடித்த பல நடிகர் நடிகைகளின் முகபாவனை நடிப்பு வருகிறதா என்று கூறினால் அந்த அளவிற்கு இல்லை.

தற்பொழுது நடிக்கிறார்கள் ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்ததுபோல தற்பொழுது இல்லை. அதேபோல் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு துறை என்று கூட கூறலாம் சினிமாவிற்கு தேவையானது கதாநாயகன்-கதாநாயகி பாடல் இசை மட்டுமல்ல முக்கியமான தேவை காமெடி நடிகர்கள்.

அப்படி காமெடியிலும் பெண்கள் கலக்கி சாதனை படைத்தது இரண்டு நடிகைகள் இருக்கிறார்கள் குறிப்பாக நமது மனோரமா ஆச்சியை கூறலாம். அவருக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்தும் பெண் காமெடி நடிகராக சினிமாவில் வளர்ந்து வந்தது தற்போது பல பேருக்கு முன்னோடியாக இருப்பவர் தான் கோவை சரளா.

இவர் 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பும் பாக்யராஜ் அவர்கள் திரைப்படத்திலேயே நிறைய திரைப்படத்தில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு ஏனென்றால் காமெடி நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்தது இல்லை இவரே முதன் முறையாகும்.

அப்படி கமலஹாசன் அவர்களுக்கு கோவை சரளா அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சதி லீலாவதி. இப்படி இருக்க நடிகை ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மற்றும் காமெடி காட்சியில் வரும் காமெடி மக்களை மிகவும் கவரும் வண்ணம் இருந்ததால் இவர்களது ஜோடி நீண்ட நாட்கள் ஏன் நீண்ட வருடங்கள் மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது அம்மா கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கி வரும் நடிகை கோவை சரளா ஐம்பத்தி ஒன்பது வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை அது ஏன் என்று அவரிடம் கேட்டுக் கொள்வது அவருடைய சகோதரிகளுக்காக சம்பாதிக்க வந்த நடிகை கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்று கூறினார்.

நடிகை கோவை சரளா ஒரு நல்ல காமெடி நடிகை மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் நிறைந்திருப்பதால் இதனை கேள்விப்பட்ட பல ரசிகர்களும் அவரை வாழ்த்துகிறார்கள் இவரது செயலை கண்டு அனைவரும் வியந்து போய் தான் இருக்கிறார்கள்.