50 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் 4 இளம் நடிகைகள்.. யார் யார் தெரியுமா? இதுல அந்த யூடியூப் நடிகையும் இருக்காங்களா?

செய்திகள்

சினிமா என்பதே ஒரு மாயை தான். வயதான நடிகர்களுக்குக் கூட மேக்கப் போட்டு இளம் வயது நடிகைகளுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்ய விடுவார்கள். அதையும் பார்த்து ரசித்து சிலிர்த்துப் போகும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் 50 வயது மதிக்கத்தக்க ஹீரோ ஒருவர் அடுத்ததாக தன்னுடைய படங்களில் நான்கு இளம் நடிகைகளுடன் ஜோடி சேர உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கே அ திர்ச்சியைக் கொடுத்துள்ளது. இத்தனைக்கும் அவர் பெரிய அளவில் வியாபாரம் இல்லாதவர். ஒளிப்பதிவாளராக தன்னுடைய கேரியரை தொடங்கி நடிகராகவும் தன்னை முழுமையாக செதுக்கி கொண்டவர் நடராஜன் சுப்ரமணியம். இவருக்கு நட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு.

இவர் வி ல்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார் நட்ராஜ். இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி என்ற நடிகை நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலில் பிரபலமான நந்தினி என்பவரும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சாத்வி பாலா, இன்னொரு இளம் நடிகையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹாரூன் என்பவர் இயக்கும் இந்த இப்படம் சைக்கோ திரில்லர் வகையைச் சார்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. நட்ராஜ் நடிப்பில் ஏற்கனவே மிளகா, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் வெற்றி பெற்றன.