40 வயது இயக்குனருடன் காதலில் விழுந்த அனு இம்மானுவேல்!! அட இவரா? இவர் இந்த நடிகரின் அண்ணனாச்ச்சே!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

வெள்ளித்திரை சினிமாவில் எத்தைனையோ நடிகர் நடிகைகள் பல வருடங்களாக நடித்து வந்த போதிலும் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாத போதில் தனது நடிப்பு மற்றும் அழகால்ஒரு சில படங்களிலேயே மக்களிடையே மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமடைப்பவர்கள் சிலரே. அந்த வகையில் திரைக்கு வந்த சில வருடங்களிலேயே முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் அனு இம்மானுவேல்.

அமெரிக்காவில் பிறந்த அனுஇந்தியாவில் படித்து கொண்டிருந்த போது  2011-ம் ஆண்டு வெளியான ஸ்வப்னா சஞ்சரி என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் அமெரிக்காவில் தனது கல்லூரி படிப்பைத் தொடர்ந்த அனு முதலில் துல்கர் சல்மானுடன் சார்லீ எனும் படத்தில் நடிக்க தேர்வானார்.

ஆனால் அவரது இறுதி தேர்வுகள் காரணமாக அப்படத்தில் நடிக்கமுடியாமல் போனது. அதன்பின் நிவின் பாலியின் ஆக்சன் ஹீரோ பீஜூவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் உடல் அழகால் ரசிகர்களை கவர்ந்த அனு மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழில் விஷால் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெற்றியடைந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் வரவேற்பை பெறறார் அனு. பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் 23-வயதான அனு 40- வயது இயக்குனருடன் காதல் வசப்பட்டு அவருடன் டேட்டிங் சென்று வருவதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் கிசுகிசுத்த வண்ணம் உள்ளது.

அனு தெலுங்கில் மஞ்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர்ஆஜோதி கிருஷ்ணா இயக்கிய ஆக்சிஜன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜோதி கிருஷ்ணாவுக்கும் அனுவுக்கும் இடையே நெருக்கும் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக தகவல்கள்  கிசுகிசுத்த வண்ணம் உள்ளது.

தமிழில் வெளியான 7G ரெயின்போ காலனி,கேடி,சுக்ரன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ரவிகிருஷ்ணாவின் அண்ணன் தான் ஜோதி கிருஷ்ணா. தெலுங்கில் பிரபல இயக்குனரான ஜோதி கிருஷ்ணா தமிழில் எனக்கு20 உனக்கு 18,கேடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அனுவும் ஜோதிகிருஷ்ணாவும் அடிக்கடி வெளியில் டேட்டிங் சென்று வருவதாக புலம்பி வருகிறது.

அனு தற்போது தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது தனது படமான “சைலஜா ரெட்டி ஆல்லுடு”படத்தில் பல முன்னனி நடிகைகளுடன் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சயாசச்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நாகசைதன்யா  அனு இணைந்து நடிக்கும்“சைலஜா ரெட்டி ஆல்லுடு”திரைப்படம் தயாராகும் என பட வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இவ்வாறு பல படங்களில் நடித்து வரும் அனுவுக்கு 40 வயது இயக்குனருடன் டேட்டிங் தேவையா என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.