4 மாத குழந்தை ஒன்று காது கேட்கும் திறனை இழந்தும், காது கேட்கும் உபகரணத்தின் உதவியுடன் தாயின் குரலை கேட்டு மகிழ்ச்சியில் சிரிக்கும் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பால் அடிசன் தம்பதிக்கு, ஜார்ஜியானா என்ற மகள் பிறந்தார். பிறக்கும்போதே செவிக்குறைபாடுடன் பிறந்ததால், பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர். இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், பால் அடிசன், பிறந்த 4 மாதங்களே ஆன ஜார்ஜியானாவின் 2 காதுகளிலும், காது கேட்க உதவும் உபகரணத்தை பொருத்தினார்.
அதன் புன்னர் தாயின் குரலை கேட்ட அந்த குழந்தை புன்னகையுடன் சிரிக்கிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் கொள்ளை கொள்ளவே, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
😍When our daughter’s new hearing aids are turned on in the morning 😍#happybaby @NDCS_UK @BDA_Deaf @NHSMillion pic.twitter.com/59GZSMgp5D
— Paul Addison (@addisonjrp) December 5, 2019