38 வயதில் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு இன்று திருமணம் முடிந்தது.. புகைப்படத்தை பார்த்து அட இவரா என ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சந்திரா லட்சுமணன். கோலங்கள், வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் போன்ற சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் சீரியல்கள் தவிர மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி, அதிகாரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் என 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் சந்திரா 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

38 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை தற்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளார். சந்திரா ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார், இதில் இவருடன் டோஷ் கிறிஸ்டி என்பவர் ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இந்த தொடரில் நடித்து வரும் போது இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட கா தலித்து இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.