பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தான் காதலித்த வந்த ஜுவாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கும் திகதியை அறிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவி ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
மேலும் பின்பு பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கும் ஜூவாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளி வந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டாவும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த திருமணப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமண பத்திரிக்கையை தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
LIFE IS A JOURNEY….
EMBRACE IT…HAVE FAITH AND TAKE THE LEAP….
Need all your love and support as always…@Guttajwala#JWALAVISHED pic.twitter.com/eSFTvmPSE2
— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) April 13, 2021