29 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் பிரபல முன்னணி நடிகை!! அவ்வளவு சீக்கிரம் அவங்கள மறக்க முடியுமா?

செய்திகள்

80களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை அமலா. டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு தென் இந்திய மொழியில் ஒரு சரித்திர சாதனையை படைத்து விட்டார் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு பல படங்களில் மளமளவென நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உடன் ஜோடி போட்டு அப்படியே தெலுங்கு பக்கம் சென்றவர் தான்.

பிரபல நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொள்ள அங்கேயே செட்டிலாகி விட்டார். அது மட்டுமல்லாமல் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கும் மாமியாரும் இவர்தான். இந்நிலையில் 52 வயது ஆகியும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதில் எப்போதுமே ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அமலா.

1991 ஆம் ஆண்டு வெளியான கற்பூர முல்லை என்னும் படம் தான் அமலா கடைசியாக தமிழில் நடித்த படம். அதனைத் தொடர்ந்து தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்வானந்த் மற்றும் ரிது வர்மா நடிக்கும் புதிய படமொன்றில் செம்ம கதாபாத்திரத்துடன் தமிழுக்கு மீண்டும் வருகிறார் அமலா. அந்த கால இளைஞர்களை பித்து பிடிக்க வைத்த அமலாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.