ராகு கேது பெயர்ச்சி நவகிரகங்களில் ராகுவும், கேதுவும் சாயா கிரகங்கள் ஆகும். மனிதர்களின் நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ராகு காலம் எமகண்டம் பார்த்து தான் செய்வோம்.
ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக உள்ளன. மேலும் ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும். என்பதை பற்றி பார்ப்போம்.
பிச்சைக்காரர் கூட திடீர் என கோடீஸ்வரராக மாற போவது கூட ராகுவினால் தான் கேது என்பவர் திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிக்காட்டுபவராக இருப்பார்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் செப்டம்பர் 2020ல் தொடங்கி 18 மாதங்கள் உங்க ராசி குடும்ப ஸ்தானத்திற்கும், கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கு வருவதால் உங்க ராசிக்கு மிக சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு திடீரென பணவருமானம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். அதே சமயத்தில் உங்களால் சேமிக்க முடியவில்லை என்றால் வருத்தம் ஏற்பட்டு செலவுகளும் உண்டாகும். மேலும் உங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை தேவை. உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் ராகு அமர்கிறார். மேலும் ஜென்ம ராகு ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் அதாவது ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுவரை உங்க ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார். உங்களுக்கு திடீர் பணவருமானம் மற்றும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி திருமணம் நடைபெறுவதில் எந்த தடைகளும் இருக்காது.
மேலும் உங்கள் பணியில் திடீர் இடமாற்றம் வரக்கூடும். திடீர் செலவுகள் உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை கவனமாக செய்ய வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றன இது நாள் வரை உங்க ராசியில் அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு செவது மிக சிறப்பு.
மேலும் சுபகாரியங்கள் திருமணம் மற்றும் கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் போன்ற விஷயங்கள் ஏற்படக் கூடும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மற்றும் தொழில் அமையும் வாய்ப்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஏற்படும். மேலும் கேது பெயர்ச்சியால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.
கடகம்:
கடக ராசிக்கரர்களுக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது அமர்கிறார். விரைய ஸ்தானத்தில் ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகம் உண்டாகி திடீர் பணத்தை கொடுப்பார்.
மற்றவர்களின் சூழ்ச்சியில் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் இனி மறைந்து விடும். மேலும் பல வித சோதனைகளை தாண்டி மாற்றங்கள் உண்டாகும். நீங்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். அதுமட்டுமின்றி சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மற்றும் மரியாதை கொடுப்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு முதலாளி ஆகும் யோகம் வரும் லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மேலும் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சம்பள உயர்வு மற்றும் வசதி வாய்ப்புகள் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமை அதிகரிக்கும் இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு தைரியத்தை அதிகரிக்கும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் இதில் சகோதரம், வீரியம், வீரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளலாம். ராகுவிற்கு குறு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும்.
குடும்பத்தில் திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அதுமட்டுமின்றி நிர்வாக பொறுப்புகள் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடி வரும். ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வேலைகளில் இடையூறு நீங்கி மறைமுக எதிர்ப்புகள் விலகி இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு 3 ல் இருந்த கேது தற்பொழுது 2ம் இடத்திற்க்கும், 9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கு வருகிறார்கள். ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெற்று தரும். நீங்கள் எதிர்ப்பார்க்காத வகையில் பணம், பொன், பொருள் ஆகிய வாசிகளை கொடுப்பார்.
சிலர் பிள்ளைகளின் படிப்புக்காக சொந்த ஊரை மாற்றக்கூடும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் முயற்சி தன்னம்பிக்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உண்டாக்க கூடிவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராசியில் கேது தோன்றுவதால் கௌரவம், புகழ் மற்றும் அந்தஸ்து ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி இந்த நிலையில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு அதிக பணம் செலவாகும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு ராசியில் கேது 7 ஆம் இடத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்தில் கேது 6ஆம் இடத்தில் ராகு வருகிறது.
மேலும் தொழில் முயற்சிகள் கை கூடி வரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கை கூடி வரும் நீண்ட நாள் பட்ட கடன்களும் இப்பொழுது அதை அடைக்க முடியும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும், 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ம் இடத்திற்கும் செல்கின்றன. மேலும் ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது தூக்கத்தை கெடுத்து விட்டது.
உங்களுக்கு தேவையற்ற செலவுகள் குறைய ஆரம்பிக்கும். கடன் சுமை குறையும். ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் ஏற்படுத்தும். சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். 18 வருடத்திற்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர்களின் வகையில் தோஷங்கள் நீங்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு உங்க ராசிக்கு 5ஆம் இடத்திலும், 11ஆம் இடத்திலும், இருந்த ராகு, கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும், 10ஆம் இடத்திற்க்கும் மாறுகின்றன. இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் எல்லாம் அடைக்கப்படும். பின்பு சுபகாரியம், திருமணம், பிள்ளைகள் படிப்புக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்:
மீன ராசிக்கார்களுக்கு இந்த ராசியில் 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும், 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகின்றன. 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானங்களில் ராகு தோன்ற உள்ளார்.
உங்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை உண்டாக்கும். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் இப்பொழுது நீங்கி விடும்.
இதில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக உங்களை தேடி வந்து உதவி செய்வார்கள்.