19 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமான இளம் நடிகையின் அம்மா! தங்கச்சி பாப்பா பிறந்த இன்ப அ திர்ச்சியில் பிரபல இளம் நடிகை! யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

சித்தி 2, பாக்யலட்சுமி சீரியல் நடிகை நேகா மேனன், தனக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தன் அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.

சன் டிவி யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன்.

சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதி நாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது அவருக்கு பெண் குழந்தையை பிறந்திருப்பதாகவும், அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார்கள் எனவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நேகா.

நேஹா 2002-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சகோதரியைப் பெற்றுள்ளார். மேலும் தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்க காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ட்ரோல் செய்பவர்களுக்கு “இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதில்களுக்கு, நான் எதுவும் செய்யப் போவதில்லை. எனவே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.