19 கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்… பலூன் போல பெரிதாக்கிக் கொண்டே சென்ற பரிதாபம்… ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

செய்திகள்

குண்டாக இருக்கும் பெண்களுக்கு வயிறு பெருத்துக் காணப்படும். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பெண்ணின் வயிறானது மிகப் பெரிய அளவில் வீங்கியதால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஏன் தூங்கக்கூட முடியாமல் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன் என்ற பெண்மணிதான் இவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வயிறு நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டு சென்றிருக்கிறது. இவரது எடை தற்போது 121 பவுண்டாக இருக்கிறது. இதில் அவரது வயிறு மட்டுமே 44 பவுண்ட் (19 கிலோ) எடைக்கொண்டதாக இருக்கிறது.

இவர் கடந்த இரண்டு வருடமாக இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறார். திடீரென வயிறு பெரிதாகி வலி ஏற்பட்டவுடன் ஹுவாங் மருத்துவ உதவியை நாடியுள்ளார். மருத்துவர்கள் இவரது வலியை குறைப்பதற்கு மருந்துகளை தந்துள்ளனர். இருந்தாலும் வலியும், வீக்கமும் அதிகமாகிக்கொண்டே தான் இருந்துள்ளது.

பின்பு அவரது உடல்நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணிற்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் எனப் பல பிரச்சனைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இருந்தாலும், மருத்துவர்களால் வயிறு ஏன் பெரிதாகிக் கொண்டே போகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து ஹுவாங் கூறும்போது, “என்னுடைய வயிறு இப்படி வீங்கி இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. எனது இரு குழந்தைகளை கவனித்துக் கொள்வது பெரும் சிரமமாக உள்ளது.

நான் தெருவில் நடந்து செல்லும் போது மக்கள் என்னை கர்ப்பிணியாகத்தான் பார்க்கிறார்கள். எனது குழந்தைகளை அவரது தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஹுவாங் குவாக்சியன் அண்மையில் சமூக வலைதளங்களில் தனது நிலைமையை வெளிப்படுத்தி தனது சிகிச்சைக்காக பண உதவி ஈட்டியது குறிப்பிடத்தக்கது.