16 பேருக்கு ஒரு பாத்ரூமா?? முதல் நாளில் பிக் பாஸ் வீட்டில் நடந்தது இது தான்..!! வாங்க போலாம்..!!

செய்திகள்

பிக் பாஸ் 4 தொடங்கியது ஒரு சிறிய வெள்ளைக்கோடு சற்று பெரிதானது அதனை புகை சற்று சூழ்ந்தது பிறகு அதிலிருந்து ஒரு உருவம் வேறு யாரும் இல்லை நல்ல உலக நாயகன் கமல் அவர்கள்.பார்க்க சற்று அழகாகவே இருந்தார். ஒரு பாடலின் மூலம் ஆரம்பித்தார்.
அவரின் உடை சற்று வித்தியாசமாக இருந்தது பக்கவாட்டில் ஒரு சிறிய பை உள்ளே என்ன இருந்திருக்கும்.அபூர்வ சகோதரர்கள் படத்தில் அந்த குட்டி கமல் இன்று வரை பு திராக உள்ளது போல் தான் இதுவும்.

முதலில் அவர் பிக்பாஸ் 4 வீட்டை அறிமுகப்படுத்தினார்.அதன் அழகு மிகவும்  வசீகரமாகவும் ஒரு  வண்ணமயத்துடனும் மிக மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக உழைத்த அணைத்து  வடிவமைப்பாளர்களுக்கும் தொழிலாளத் தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை  தெரிவிக்கலாம் .


நம்முடைய வீடு இவ்வாறு இருந்தால் எப்படி இருக்கும் எனற யோசனை பார்க்கும் அனைவரையும் தொற்றி கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.ஆசை மனிதனை என்றைக்கு விட்டு வைத்துள்ளது.

புரியாமல் பேசும் அவர் ‘நள்ளிரவு போன பின்னே.. வெள்ளி முளைக்கும்’ என்கிற தேவர் மகன் பாடலை நினைவுகூர்ந்து பின்பு , “இருட்டில் ஆரம்பிச்சு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம் பார்த்தீங்களா?.. இது தான் குறியீடு பாஸ்..” என்று சிறுபத்திரிகை சினிமா விமர்சனம் மாதிரி புரியாமல் பேசினார். இது ஒன்றும் நமக்கு திகைப்பு இல்லை.


எப்போதும் போல தான் ஆனால் சில புதிய விதிகள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதன்படி லிமிடெட் சப்ளைதானாம் அணைத்தும். அடுப்பு நான்கு இருக்கும் ஆனால் இரண்டு தான் எரியும். அங்கு ஒரு கிளியின் வயிற்றுக்குள் டெலிபோன் இருந்தது அதுவும் ஒன்லி இன்கம்மிங்தானாம் நோ அவுட்கோயிங்.
நம்ம கார்ப்பரேஷன் டாய்லெட் மாதிரியே இங்கு ஒரு பாத்ரூம் பூட்டிருந்தது. மத்த இடங்கள்  எல்லாம் லி மிடேஷன் ஓகே.. ஆனால் இந்த இடத்துல எப்படி.. அ வசரம்  காட்ட வேண்டிய இடத்துல ஸ்லோமோஷன்ல முடியுமா?” என்று ‘க லீஜ்’ வாசனையுடன் டைமிங் ஜோக் அடித்தார் கமல்.

த ண்டனை தரும் இடம் அது தான் அடுத்த இடம் அதாவது  ஜெயில். பார்க்க ஜெயில் மாதிரி இல்லை அது லக்ஸரி சிங்கிள் பெட்ரூம் போல கண்ணாடிக் கதவுடன் இருந்தது. “இது ஜெ யில்தான். கம்பியில்ல பார்த்தீங்களா… நெஜ ஜெயில்லயே கம்பி கிடையாதோன்னு நிறையப் பேருக்கு சந்தேகம் இருக்கு” என்று அரசியல் பகடி செய்தார். காப்பில் கெடா வெ ட்டுறது இது தான்.கடந்த சீஸனில் இது ஜெயிலில் ‘ஷாப்பிங்’ போனதைப் பற்றியதாக இருந்தது.

பஞ்ச பூதத்தில் ஒன்றான தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த வருடமும் நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லையாம். நீர் சிக்கனத்தை விழிப்புணர்வுச் செய்தியாக வலியுறுத்துகிறார்களாம். ஆனால் நீச்சல் குளத்தைக் கட்டி அதன் மீது வலையும் போட்டிருந்தார்கள்.  எதற்காக என்று தான் தெரியவில்லை.
பிக்பாஸின் பிரத்யேக அந்த இசை ஒலிக்க பிரதான மேடைக்கு வந்தார் கமல். “ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தீங்கன்னு ஆரம்பத்துல என்னைக் கேட்டாங்க.. இதன் கணிதம் அவர்களுக்குப் புரியவில்லை” என்று ஒவ்வொரு சீஸனிலும் பாடும் வழக்கமான பாட்டைப் பாடினார். கொரோனா எஃபெக்ட் காரணமாக நேரடி பார்வையாளர்களின் கைத்தட்டல் இருக்காது. எனவே டிஜிட்டல் பார்வையாளர்கள், சதுர வடிவில் ஜும் மீட்டிங்கின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் நல்லது தான்.
சமூக வலை தளங்களில் இந்த சீஸனின் போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியல், அவற்றில் எத்தனை  தான் உண்மை என்று வாங்க பார்ப்போம்” என்று கமல் சொன்ன போது,ஆச்சர்யம் காட்டுவார்களோ என்று இருந்தது ஆனால் 99% அதே பட்டியல் தான்.


விஜய் டிவி புகழ் ,முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரியோ. உள்ளே தெலுங்குப் பாடல் நடனத்துடன் வந்தார். “நான் ரொம்ப செளகரியமான ஏரியாவுல வளர்ந்தவன். ரொம்ப பயமா இருக்கு. இருந்தாலும் அந்தப் பயத்தை எதிர்கொள்ளணும்னு வந்திருக்கேன். யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது… என்னை ஹர்ட் பண்ணவும் விடக்கூடாது. இதுல எப்பவும் கான்ஷியஸா இருப்பேன்” என்று தன்னைப் பற்றி சொன்னார் ரியோ.

இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டார்கள் ,ரியோவின் மனைவி ஸ்ருதி, கணவரை வாழ்த்திப் பேசி விடை தரும்போது “நான் வேணா அந்தப் பக்கம் திரும்பிக்கறேன்” என்று ஜாலியாக திரும்பினார் கமல்.

எதுக்கு இப்படி,கோயிலில் நுழைவது போல சாமி கும்பிட்டபடி பயபக்தியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ரியோ. வீட்டைப் பிரமிப்புடன் சுற்றிப் பார்த்தவர், பாவம், எத்தனை நேரம் அடக்கிக் கொண்டிருந்தாரோ… பாத்ரூமிற்குள் முதலில் நுழைந்து சிறுநீர் ’ கடமையை முடித்து ‘அப்பாடா.. திறப்பு விழா நடத்தியாச்சு’ என்று பெருமையுடன் வெளியே வந்தார்.
ஊட்டாறு ஒரு டகால்டி,நடுவில் இருந்த கட்டிலில் உஷாராக கர்ச்சீப் போட்டு இடம் பிடித்த ரியோ, அதற்கு சொன்ன காரணம்தான் விசித்திரமானது. “பே ய் வந்தா கூட அவங்களைத் தாண்டிதான் நம்ம கிட்ட வரணும்”. ரியோவிற்குள் ஒரு அஞ்சாங்கிளாஸ் பையன் பத்திரமாக இருக்கிறான் போலிருக்கிறது.

இந்த சீஸனில் தனது முதல் டிரேட்மார்க் வசனத்தை கமல் சொன்னார்.. போட்டியாளர்களை தழுவி விடை பெற தர முடியாததை குறிக்கும் வகையில், “கோவிட நாம சங்கீர்த்தனம்… கோவிடா… கோவிடா” என்று சமகால நடைமுறைச் சி க்கலை கிரேஸி மோகன் லாங்வேஜில் ஜாலியாக சொன்னது ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது.


இரண்டாவது போட்டியாளராக நுழைந்தவர் சனம் ஷெட்டி. கடந்த சீஸன் தொடர்பாகவே இவரது பெயர் அப்போதே அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆம். தர்ஷனின் ‘தோழியாக’ இருந்தார். இவர் தொடர்பான AV காட்சியில் இவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் – ‘Your Souls Fan’.  சமீபத்தில் ஒரு தீ விரமான மருத்துவ சி கிச்சையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.

அடுத்த போட்டியாளர் நடிகை ரேகா… கடவுளே… அவரா இது? வயதின் களைப்பு முகத்தில் அப்பட்டமாக படிந்திருந்தது. ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் ஒரு ச டன் ச ர்ப்ரைஸ் மு த்தக் காட்சியில் நடித்த அதே ரேகாதானா? காலத்தின் கோலம்.


அடுத்த போட்டியாளராக உள்ளே வந்தவர் பாலாஜி. ஆறடி உயரத்தில் ஆ ஜானுபா  குவராக இருந்தார். “ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர்” என்று இவரை கமல் அறிமுகப்படுத்தினார். இவரின் AV காட்சியில் இவர் பீச் மணலில் வேகமாக ஓடி வரும் காட்சி டாப் ஆங்கிளில் பதிவாகியிருந்தது. அங்கிருந்த வெகுசனம் ஒருவருக்கு ‘சூட்டிங்’ கேமரா கண்ணில்படவில்லையோ… என்னமோ… “ஏன் இந்த ஆ ளு நாய் துரத்தற மாதிரி ஓடறான்..” என்று  தி கைத்து திரும்பி திரும்பிப் பார்த்தது சு வாரஸ்யமான காட்சி.

ஐந்தாவதாக உள்ளே வந்தவர் ‘அனிதா சம்பத்’. செய்தி சேனல்களில் அதிகம் ஆடாமல் அசையாமல் இவரை அதிகம் பார்த்திருப்போம். நிஜத்தில் ‘து றுது று’வென்கிற முயல் குட்டி போல இருந்தார். அப்பா எழுத்தாளராம். பெயர் ஆர்.சி.சம்பத். தேடிப் பார்த்ததில் சினிமா ஆளுமைகள் பற்றி நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.


‘பிக்பாஸ் போட்டியாளர்களில் வயது குறைந்தவர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்’ என்கிற முன்னுரையுடன் கமல் அறிமுகப்படுத்தியவர் ஷிவானி. நடிகை ஷாலினி (அதாங்க… மிஸஸ் ‘தல’) சற்று பு ஷ்டியாக இருந்தால் எப்படியிருப்பாரோ, அப்படி இருந்தார். ஒரு க வர்ச்சியான கு த்தாட்டப்பாடலுடன் நமக்கு அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிக பிரபலம் போலிருக்கிறது. எனவே மக்கள் ஏற்கெனவே ஆர்மியை ஆரம்பித்திருப்பார்கள்.

ஏழாவதாக உள்ளே வந்தவர் ‘ஜித்தன்’ ரமேஷ். ‘இவருடைய தந்தை சினிமாவில் பெரிய தயாரிப்பாளர். ஆனால் அவரின் தயாரிப்பில் இதுவரை நான் நடித்ததில்லை’ என்றார் கமல். ‘ஜித்தன் ரமேஷ் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும்’ என்று சொன்னபடி ரமேஷ் அறிமுகமானாலும் அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே நமக்கு ஐந்து நிமிடம் ஆனது. ஒரு படத்தில் வெற்றி பெற்று பிறகு தொடர்ச்சியாக தோ ல்வியையே சந்தித்த வ லி இவரின் பேச்சில் தெரிந்தது.


அடுத்து உள்ளே வந்தவர் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன். சினிமாவிலும் பிரபலம். எடுத்தவுடனேயே ஆறரைக் கட்டையை அ நாயசமாக தா ண்டிவிடும் அளவிற்கு எடுப்பான குரல். ஏற்கெனவே நிறைய ஆடும் இவர், “நாட்டுப்புறக்கலைப் பாடல்களை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் நீங்கள் பரப்ப வேண்டும்” என்று கமல் அறிவுரை கூறியதும்… ச லங்கையைக் கட்டிக் கொண்டார்.

அடுத்து வந்த போட்டியாளர் ‘ஆரி’. “நிறைய தோ ல்விகள்ல இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அடையாளங்களைச் சுமந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் போக விரும்பவில்லை. எ திராளியைப் பொறுத்துதான் என்னோட ஆட்டம் இருக்கு” என்று தெளிவாகவும் நம்பிக்கையாகவும் பேசும் ‘ஆரி’ ஒரு நல்ல போட்டியாளராக பி ரகாசிப்பார் என்று தோன்றுகிறது.


பத்தாவது போட்டியாளராக உள்ளே வந்தவர்  சோமசுந்தர். MMA… அதாவது Mixed Martial Arts என்னும் ஆ பத்தான விளையாட்டில் இவர் சாம்பியனாம். மாடலாகவும் இருந்திருக்கிறாராம். பெண்கள் சைடிலிருந்து இவருக்கு உடனே ஆர்மி ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. அத்தனை ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அனிருத்தின் தங்கச்சி மாதிரியான தோற்றத்தில் இருந்த இவருக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுண்டாம். பெயிண்ட்டிங் நிறைய செய்வாராம். போகிற போக்கில் இவர் சொன்ன ஒரு தகவல் தூக்கி வாரிப் போட்ட வைத்தது. செல்போன் உபயோகிக்கவே இவருக்குப் பிடிக்காதாம். இந்தக் காலத்தில் ஓர் இளம்பெண் இதைச் சொல்வது படுஆச்சரியம். உலக அமைதிக்கான நோபல் பரிசை உடனே இவருக்கு வழங்கி விடலாம்.

‘கஜா’ புயலின் போது நிஷா செய்த சமூக சேவைகளை கமல் புகழ்ந்த போது நெளிந்தபடி அதை ஏற்றுக் கொண்ட நிஷா… ‘நான் ஒரு கறுப்பு ரோசாங்க’ என்றதை கமல் முதலில் கவனிக்கவில்லையென்றாலும் மீண்டும் அடம்பிடித்து சொன்ன பிறகே அடங்கினார் நிஷா.
ரியோ, விஜய் டிவி என்பதால் சக நிலைய வித்வான்கள் பலரை அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. “வீட்ல ஜிம்மி நல்லாயிருக்கா..  என்கிற அளவிற்கு பலரையும் நெருக்கமாக விசாரிக்கிறார்; வரவேற்கிறார்.

இவர் மொட்டை மாடியில் எடுத்த போட்டோவிற்காக சில்லறையைப் பயங்கரமாக சிதற விட்டிருந்த மக்கள், முன்பே ஆர்மி ஆரம்பித்து அயர்ன் செய்த யூனிபார்மை அணிந்து ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக இருக்கும் சமயத்தில் ரம்யாவை சற்று ச கித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இவர் சிரிக்கும் போதுதான் தன்னிச்சையாக நமக்குள் ஒரு பீ தி ஏற்படுகிறது.


பதினான்காவது போட்டியளாராக நுழைந்தவர் சம்யுக்தா.  மிஸ் சென்னை, ஃபிட்டெனஸ் மாம், பிஸ்னஸ் வுமென்… என்று பல பரிமாணங்களைக் கொண்ட சம்யுக்தா… “நீங்க எந்த காலேஜ்ல படிக்கறீங்க… காலேஜா… நானா?’ என்கிற விளம்பர வாசகம் மாதிரி இளமையாக இருந்தார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய புரிதலுடன் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

‘எனக்கு சிங்கிள் பெட் வேணும்’ என்று வீட்டிற்குள் ஆவலாக வந்த சம்யுக்தா, உள்ளே அனைவரும் துண்டு போட்டு இடம் பிடித்திருந்ததைப் பார்த்து சற்று ஏ மாற்றமடைந்தார்.


அடுத்து வந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பழைய தொலைக்காட்சி நாடகங்கள், பாலசந்தர் படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். இவரின் குணாதிசயம் சற்று வித்தியாசமாக இருந்தது. ‘எடுத்த பொருளை எடுத்த எடத்துல வெக்கணும்.. இல்லைன்னா. கோ பம் வந்துடும்’ என்று சீரியஸ் முகத்தைக் காட்டினார். இதைச் சுருக்கமாக விளக்கி விடும் வீடியோ காட்சி நன்றாக இருந்தது.

கடைசிப் போட்டியாளராக நுழைந்தவர் ஆஜித்… சின்னப் பையனாக இருந்த போது சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர். இப்போது பெரிய பையனாகி ஹீரோ மாதிரி நடனமாடினார். இவரது குடும்பப் பின்னணியைக் காண நெகிழ்வாக இருந்தது. ‘நான் ஒரு introvert… பார்க்கலாம்’ என்கிற அறிமுகத்துடன் உள்ளே சென்றவர், ‘தொடத் தொட மலர்ந்ததென்ன…’ பாடலை அருமையாகப் பாடி ஹவுஸ்மேட்ஸ்களின் உள்ளத்தை உடனே கொள்ளை கொண்டார். கேப்ரெல்லாவின் கண்களில் பல்பு எரிந்தது. என்ன நடக்கப் போகிறதோ?

பிறகு அவர்கள் தங்களுக்குள் சலசலவென பேசிக் கொண்டிருக்க ‘நீங்க முடிச்சிட்டீங்கன்னா.. சொல்லுங்க.. நான் ஆரம்பிக்கிறேன்’ என்று பிக்பாஸ் மென் அதட்டல் போட்டதும் கப்சிப் என்று ஆனார்கள்.

இதற்குப் பிறகுதான் பிக்பாஸின் அந்த பெரிய ஆ ப்பு குறித்தான அறிவிப்பு வந்தது. அதாவது பிக்பாஸ் வீடு p artial loc kdown சிஸ்டத்தில் இயங்கும். ஒரு பெட்ரூம், ஒரு பாத்ரூம், ஒரு கழிவறை என்று எல்லாமே பாதிதான் இருக்கும். ‘எ திர்பாராத புதிய ச வால்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களின் தனித்தன்மை’ என்று பெருமையடித்துக் கொண்டார் பிக்பாஸ். (என்னா ஒரு வி ல்லத்தனம்?!) போட்டியாளர்கள் சவால்களில் வெல்வதின் மூலம் விதிகள் கொஞ்சமாக கொஞ்சமாக த ளர்த்தப்படும் போலிருக்கிறது.

‘பதினாறு பேருக்கு எப்படி ஒரு பாத்ரூம்?’ என்கிற பீ தி போட்டியாளர்களின் கண்களில் தெரிய ஆரம்பித்தது. ‘ரெண்டு ரெண்டு பேரா போய் வேலையை முடிங்கடா’ என்கிற வடிவேலுவின் காமெடி மாதிரி ஆகி விடும் போலிருக்கிறது. பாவம் ரியோ… கர்ச்சீப் போட்டு அவர் கட்டிலை புக் செய்ததெல்லாம் வேஸ்ட். அவர் கண்களில் இப்போதே பீதி தெரிய ஆரம்பித்தது. ஷிவானியின் க ண்கள் கலங்கியது போல் இருந்தது. அனிதா சம்பத் போல் தன்னம்பிக்கையுடன் தெரிந்தவர்களும் இருந்தார்கள்.

நன்றி:விகடன்.