திருமணமான பின்னும் அடுத்தவர் மீது ஆசை வருவது ஏன்? ஆட்டம் காணும் ஜோடிகள்! அடங்காத ஆசை!

கிசுகிசு

திருமணம் என்பது மொபைல் போன் வாங்குவது போல, ரொம்ப நாள் தேடி, அலைந்து திரிந்து ஒரு மாடல் வாங்கி, ஆசை தீர பயன்படுத்தி பார்ப்போம். கொஞ்ச நாள் ஆன பிறகு, பிற போன்களைப் பார்க்கும் போது, அடடா அந்த மாடல் வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுவது இயற்கை. அதே போலத்தான் ஆண் பெண்ணை பார்ப்பதும், பெண் ஆணை பார்ப்பதும் இயற்கையாக நடக்கக்கூடியது. பார்க்கும் வரை பி ரச் சனையில்லை, மனதில் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான், குடும்பத்திற்குள் பல பி ரச்சனைகள் உருவாகிறது.

திருமணபந்தம் என்பது இறைவனால் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் ஆவதற்கு முன்பு, எல்லோருக்கும் வாழ்க்கை துணையைப்பற்றி நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும். காதல் திருமணத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வதால், ஆரம்பகாலத்தில் திருமண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் செய்யும் த வ றுகளை மன்னித்து, ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் திருமண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். புரிதல் என்பதற்கு நேரம் இல்லாமல், பணத்தை கட்டிக்கொண்டு வேலை வேலை என்று அலைவதாலே பல ஏ க்கங்களுக்கு தீனி போட முடிவதில்லை.

நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல வாழ்க்கைத்துணை அமையவில்லை என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ பார்க்கும் போது அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அது தவறு. திருமண வாழ்க்கை என்பது புனிதமான உறவு. வாழ்க்கை துணையின் நிறை குறைகளை அவர்களிடமே நேரிடையாக தனிமையில் இருக்கும் போது தெரிவித்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.