ஸ்ரீபதி பண்டிதரதயுள பாலசுப்ரமணியன் நான் நல்லாருக்கேன்னு வெளியிட்ட கடைசி வீடியோ..!! அவர் நன்றாக இல்லை என்பதை தெரிவிக்கும் கடைசி புகைப்படம் இதோ..!!

செய்திகள்

ஸ்ரீபதி பண்டிதரதயுள பாலசுப்ரமணியன் ) சுருக்கமாக எஸ்.பி.பி. என்னும் ஆளுமை இன்று இறைவனின் பாத கமலங்களை சரணடைந்து விட்டார். நிறைவான வாழ்வு வாழ்ந்து சென்றுள்ளார்.
காலன் கொரோனா வடிவில் வந்து கவர்ந்து சென்று விட்டான்.உனக்கென்ன மேலே நின்றாய் (சென்றாய்) ஓ நந்தலாலா, மிக சிறந்த ஆறுதலை தந்த பாடகர்களில் ஒருவர் பாலசுப்ரமணியம்.பாடல்களில் சிறிய சிறிய நகாசு வேலை நிறைய செய்திருப்பார்.25 நந்தி விருதுகள், 6 தேசிய விருதுகள்.பெற்றவர்.

நாங்கள் கேசட்டில் பாடல் பதிவு செய்து கேட்டு வந்த காலத்தில் மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழக் கூடுமோ என்ற பாடலை 90 நிமிட கேசட் முழுமைக்கும் அந்த ஒரு பாடலை மட்டும் பதிவு செய்து அந்த கேசட்டை ஓட விட்டு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பான். . அட வேறு பாட்டை போடு என்பார்கள்.

அவரின் எண்ணற்ற பாடல்கள் செவிக்கு விருந்தாகியுள்ளன. மூன்று தலைமுறையாக தனது கந்தர்வ குரலால் வசீகரித்து வந்த மகா கலைஞன்.இன்று பேஸ்புக்கில் டைம்லைனில் எந்த பக்கத்தை புரட்டினாலும் உனது கண்ணீர் அஞ்சலி பதிவுகள் தான் தென்படுகின்றன.

பெரு வாழ்வு வாழ்வது முக்கியமில்லை. அனைவரிடமும் அன்பு சம்பாரித்து வைத்துள்ள பாக்கியவான் நீ.
இதயத்திலிருந்து கண்ணீர் அஞ்சலி, பாதிப்பிலிருந்து மீள சில நாட்களாகும். இனி காரில் நெடுஞ்சாலையில் நெடுந்தொலைவு பயணிக்கும் போது எல்லாம் உனது பாடலை கேட்கும் போது எல்லாம் கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினம் என்றே தோன்றுகிறது.

அவர் வெளியிட்ட கடைசி வீடியோ