ஷாருக்கான் முதல் ரஜினி வரைக்கும் வரிசையில் நின்றார்கள்! நான் ஒத்துக்கவே இல்லை ஏன் தெரியுமா?

கிசுகிசு

90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஒரு ரகசியத்தை கூறியுள்ளார். அந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிட்டு இருகின்றது. அந்த வீடியோல் ஷாருக்கான் முதல் ரஜினி வரைக்கும் என்னை நடிக்க சொன்னார்கள் ஆனால் நான் ஒத்துக்கவே இல்லை ஏன் என்ற காரணத்தை பார்க்கலாம்.

90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்கனும் பெப்ஸி உமா பற்றி ஏன் என்றால் இவரின் நிகழ்ச்சி என்றால் அவ்வளவு ஆர்வமாக அனைவரும் தொலைக்காட்சி முன்னாடி தான் இருப்பார்கள். என்ன தான் டிடி, பிரியாங்கா போன்ற பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளார்களாம் இருந்தாலும் 90ஸ் காலங்களில் சன் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தான் ஒட்டு மொத்தம் தமிழகமும் உட்கார்ந்து கொண்டு பார்பார்கள்.

இப்படி படங்களில் நடிக்கும் நடிகைக்கு இல்லாத புகழ் பெப்ஸி உமாவிற்கு அப்போதிய காலத்திலே இருந்துள்ளது. இதனைக்கும் அவரின் அழகு பேச்சு, நிகழ்ச்சியில் அவர் கட்டும் வண்ண வண்ண புடவைகள் இவை அனைத்தும் தமிழக மக்கள் அனைவரும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், பெப்சி உமாவின் வசீகரிக்கும் அழகு மற்றும் புகழை கண்டு அன்றைய காலத்தில் ரஜினி மற்றும் ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடிப்பதற்கு அழைத்துள்ளனர். ஆனால் இவர் நடிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு முடியாது என்ற பதிலை அளித்துள்ளார். தற்போது பெப்சி உமா அவர்கள் கம்பெனி ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.