வெற்றிமாறன் மீண்டும் ஒரு நடிகருடன் கூட்டணி… வெளியான தகவல் யார் தெரியுமா?

செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடித்து வெளிவந்த படம் பொல்லாதவன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆடுகளம் எனும் படத்தில் இணைந்தார்கள்.

இதனை தொடர்ந்து வடசென்னை அதன்பின் அசுரன் என இதுவரை தோல்வியே காணாத வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய போவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் இது வடசென்னை 2 வா அல்லது அசுரன் 2 வா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இது 90% உறுதியாகி இருக்கும் கூட்டணி தான் என்று சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.