வெறும் 10 ரூபாய் மட்டுமே மருத்துவக் கட்டணம்! பிரபல சித்த மருத்துவர் வீரபாபுவின் “உழைப்பாளி மருத்துவமனை” இன்று தொடக்கம்.!

செய்திகள்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி  வருகிறது. சென்னையில் கொரோனா பரவல்  இருந்து வந்த நிலையில் சித்த மருத்துவத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு மேல் சிறப்பாக சிகிச்சை அளித்து எந்த வித  இல்லாமல் குணப்படுத்தி வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு தற்போது அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் இருந்து விலகி உள்ளார்.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஏற்கனவே ரஜினி பிறந்தநாளன்று கடந்த ஆண்டு ஏழைகளுக்காக பத்து ரூபாய்க்கு ‘உழைப்பாளி உணவகம்’ ஆரம்பித்து பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில், செப்டம்பர் 17 ஆம் தேதி சாலிகிராமத்தில் பத்து ரூபாய் கட்டணத்தில் உழைப்பாளி மருத்துவமனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 இந்தநிலையில், சித்த மருத்துவர் வீரபாபுவின் 10 ரூபாய் மருத்துமனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துமனை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனையில், சித்த மருத்துவம் மட்டுமல்லாமல் ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வெறும் 10 ரூபாய் எனவும் உழைப்பாளி மருத்துமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.