வெந்தயத்தின் மகிமை என்னணு உங்களுக்கு தெரியுமா..? தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள. பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!

உணவே மருந்து
வெந்தயத்தில் பலவகையான ஊட்டத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெந்தயம் குளிர்ச்சி வாய்ந்த பொருளாக உள்ளது. வெந்தயத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது. வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்: வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வெந்தயம் இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெந்தயத்தை தினமும் ஊறவைத்து தண்ணீரை குடித்து வந்தால் நீரிழிவு பிரச்சனை குணமாகும். வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இதை பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். அதுமட்டுமின்றி வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.   மேலும் வெந்தயத்தில் அமினோ அமிலம் உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரித்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் நச்சுத் தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது. அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தய கஷாயத்தை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் அதாவது வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.