வீட்டில் எல்லா இடங்களிலும் சுற்றி திரியும் பல்லிகளை விரட்ட சில டிப்ஸ்கள் !!

செய்திகள்

நம் வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பல்லிகள் இருந்தால் அது பெரிய பிரச்சனையாகவே இருக்கும்.

பிரிஞ்சு இலை:

நம் வீட்டில் சமைக்கும் பிரியாணியில் வாசனைக்காக பிரிஞ்சு இலையை பயன்படுத்துகிறோம். இந்த இலையை நெருப்பில் எரித்தால் அதில் வரும் புகை பல்லி இருக்கும் இடங்களில் பரவ விட்டு அப்படி புகை பரவுவதால் பல்லிகள் நடமாட்டம் இருக்காது.

முட்டை ஓடு:

உடையாத முட்டை ஓட்டை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வைத்து வந்தால் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அவை பல்லிக்கு பயத்தை உண்டாக்கும்.

 வெங்காயம்:

வீட்டில் பல்லிகள் இருக்கும் இடத்தில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி அந்த துண்டை பல்லி உலாவும் இடங்களில் வைத்தால் பல்லி வராது. அதுமட்டுமின்றி வெங்காய சாற்றை பல்லி இருக்கும் இடத்தில் தெளித்து வந்தாலும் பல்லி வராது.

 பூண்டு:

பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாத பொருட்களில் ஒன்று. பூண்டை பல்லி திரியும் இடங்களில் வைத்து விட்டால் அந்த இடத்தில் இருந்து பல்லி வராது.