விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்? 3 குழந்தைகளுடன் நடிகை திவ்யா உன்னியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

செய்திகள்

சினிமா உலகில் தனக்கென ஒரு பிராண்ட்டை இழந்தால் படவாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளம் தெரியாமல் ஆகி விடும் என்பது உண்மை. அதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திருமணம் செய்து விலகினால் அவர்களை கண்டுகொள்ள கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

சினிமாவில். அப்படியாக மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் திவ்யா உன்னி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த திவ்யா உன்னி.

மேலும் இவர் டாக்டர் சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதையடுத்து 2016ல் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் வி வாகரத்தும் பெற்றார்.

இதற்கு பின் ஓராண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், திவ்யா உன்னிக்கு அவரது இரண்டாவது கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி, சமீபத்தில் தான் மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பரத நாட்டியத்தை முறையாக கற்றுள்ள இவர் அவ்வப்போது மேடை நிகழ்சிகளில் அரங்கேற்றம் செய்து வருகிறார். தவிர முழு நேர குடும்ப தலைவியாக குடும்பத்தை பார்த்துக் கொண்டு வருகிறார்.