என்னவா இருக்கும்..!! விராட் கோலி, அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப அதிர்ச்சி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

இந்திய அணியின் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் ”இப்போது நாங்கள் மூன்று பேர்” என்று விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவித்திருக்கிறார்.

அனுஷ்கா சர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் பகிர்ந்த அதேப் படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.