முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!!விடிய விடிய மழை பெய்யும்!! புயல் வீசும் என பல மாதங்களுக்கு முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம் !!

செய்திகள்

நவகிரகங்களின் சஞ்சாரம், பார்வைகள், கூட்டணி ஆகியவைகளை வைத்து பஞ்சாங்கத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.2020ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று பல மாதங்களுக்கு முன்பே துல்லியமாக தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் கடுமையான மழைக்காலமாக அமைந்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் எந்தெந்த நாட்களில் மழை பெய்யும், புயல் வீசும் என்று ஜோதிடர்களால் கணித்து எழுதப்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தளித்தன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் போனதால் பல உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.

மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த சென்னையை அடுத்து வர்தா புயல் பதம் பார்த்தது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து மீண்டு வருகிறது சென்னை. அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களையும் புயல் மழை விட்டு வைப்பதில்லை. இந்த புயல், வெள்ள பாதிப்பு பற்றி பஞ்சாங்கத்தில் பல மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு விடுகிறது

2020ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை பற்றியும் வடகிழக்குப் பருவமழை பற்றியும் பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுக்கும், அணைகள் நிரம்பும் என்று பஞ்சாங்கம் கணித்தது போலவே தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரி ஆற்றிலும் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. தமிழகத்தில் பல அணைகள் நிரம்பியுள்ளன.

மழையால் பாதிப்பு

வங்கக்கடலில் குறைத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும். இயற்கை சீற்றத்தினால் சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், மாயவரம், திருவாரூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், ஆகிய ஊர்கள் கடுமையாக பாதிக்கும் என்று 2020-2021ஆம் ஆண்டிற்கான சார்வரி வருடத்திய சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகையில் மழை

கார்த்திகை மாதத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும். ஆந்திரா, தமிழ்நாட்டில் சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி, நாகப்பட்டிணம், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கனமழை பெய்யும், புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயலும் மழையும் தாக்கும்

வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று சில நாட்களுக்கு முன்புதான் வானிலை மையம் கணித்து கூறியது. பஞ்சாங்கத்தில் கடந்த பல மாதங்களுக்கு முன்பே புயல் மழையை சரியாக கணித்திருக்கிறார்கள். நவம்பர் 24ஆம்தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்றும் நவம்பர் 28ஆம் தேதி கார்த்திகை 13ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே புயல் வீசும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தானே, வர்தா, ஒக்கி, கஜா என புயல்கள் சூறையாடியுள்ளன. அத்தனை புயல்களில் இருந்தும் தமிழகம் மீண்டு வந்துள்ளது.