விடிய விடிய செல்போனில் மூழ்கி இருந்த காரணத்தால் 75 பேரின் உயிர் காப்பாற்றிய இளைஞர்..!!

செய்திகள்

விடிய விடிய செல்போனில் மூழ்கி இருந்த இளைஞர் ஒருவர் தனது குடியிருப்பு வாசிகளை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் இருந்து இரண்டு மாடி கட்டிடம் ஒன்று கடந்த வாரம் இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்த அன்று இரவு, விபத்து நடந்த கட்டிடத்தில் வசித்துவந்த குணால் மோஹித் என்ற இளைஞர் விடிய விடிய செல்போனில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டின் சமையலறை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் சத்தத்தை கேட்ட அந்த இளைஞர் உடனே நிலையை புரிந்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்த தனது குடும்பத்தினர் மற்றும் அந்த கட்டிடத்தில் குடியிருந்த அனைவர்க்கும் தகவல் கொடுத்து அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

அனைவரும் வெளியே சிறிது நேரத்தில் அந்த இரண்டு மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடம் குறித்து 9 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தகவல் கொடுத்ததாகவும், அங்கிருந்து வெளியேறும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் அவர்களால் உடனே அங்கிருந்து காலிசெய்யமுடியாமல் அங்கையே தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.இதனிடையே அந்த இளைஞரின் சாமர்த்தியத்தால் அந்த கட்டிடத்தில் இருந்த 75 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.