விஜய் பட நடிகை! 40 வயதிலும் அம்மா வேடத்தில் நடித்தும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை இதற்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ன் நடிகை கௌசல்யா. இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கவனிக்கக் கூடிய நடிகையாக வலம் வந்தார்.

பின் நேருக்கு நேர், பிரியமுடன் மற்றும் வானத்தைப் போல போன்ற படங்கள் கௌசல்யாவிற்கு அடையாளமாக அமைந்தன. அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவில் எப்படி வெற்றி பெற்றாரோ அதே போல மற்ற மொழிப் படங்களிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று தனக்கென சினிமாவில் ஒரு அடையாளத்தை படைத்தார். சினிமாவில் வயது அதிகமாகி விட்டால் மற்ற நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்காது.

அதே போலத் தான் கௌசல்யாவிற்கும் வயது காரணமாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

மேலும் சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் பூஜை போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த கௌசல்யா ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என பலரும் கேள்வி கேட்டனர். அதற்கு கௌசல்யா நான் சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. சினிமாவில் சாதித்த பிறகு தான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என ம றைமுகமாக கூறியுள்ளார்.