விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினாரா பவித்ரா.. காரணம் என்ன தெரியுமா? இதோ அவரே அளித்த விளக்கம்..!!

செய்திகள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

மேலும் தற்போது நடந்து வரும் இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா, பவித்ரா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு எபிசோட்டுகளில் முக்கிய போட்டியாளரான பவித்ரா கலந்து கொள்ளவில்லை.

இதனால் அவரின் ரசிகர்கள் பவித்ரா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தற்போது இதற்கு பதிலளித்துள்ள பவித்ரா, “சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களாக கலந்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்த வாரம் நிச்சயம் வந்து விடுவேன். உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். என் மேல் நீங்கள் காட்டும் அன்பிற்கும், எனக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.