விஜய் சேதுபதி பட புகழ் லோகேஷ் பாபு.. தற்போதைய உடல்நிலை பற்றி வெளியான உருக்கமான தகவல்.! – ”இன்னும் 20 நாட்களில்..,”.

செய்திகள்

நானும் ரவுடிதான் படத்தில் காமெடி வேடத்தில் நடித்த லோகேஷ் தனது சர்ஜரிக்கு உதவி கேட்டுள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இத்திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ். மேலும் இவர் தொலைக்காட்சிகளிலும் தனது நகைச்சுவையால் பிரபலமானார். இதனிடையே கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்தக்கட்ட சர்ஜரிக்கு உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் செய்த உதவிகளால், லோகேஷின் முதல்கட்ட சர்ஜரி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இப்போது இரண்டாம் கட்ட சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 20 நாட்களுக்குள் இந்த சர்ஜரியை செய்ய வேண்டும். ஆனால், லோகேஷின் குடும்பம் தற்போது பணமின்றி தவிக்கின்றனர். இதனால், முடிந்தவர்கள் உதவிகளை செய்யுங்கள்’ என அவர் கேட்டு கொண்டுள்ளார்.