விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்தவரா இந்த சீரியலில் நடிக்கிறார்.. யாரு என்று தெரியுமா?

செய்திகள்

விஜய்யின் ஜில்லா படம் வெற்றிபெற்ற ஒரு படம். மோகன்லால், காஜல், சூரி என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.

இதில் ஒரு காட்சியில் குட்டி பெண் வெடிகுண்டு விபத்தில் சிக்குவார். பின் அவரை விஜய் மருத்துவமனையில் சேர்த்து அந்த குழந்தையை சந்திப்பார்.

குழந்தை நட்சத்திரமாக அந்த காட்சியில் நடித்திருந்தவர் ரவீனா. இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா, அதாவது இவர் இப்போது ஒரு சீரியலில் நடித்து வருகிறாராம்.

 

எந்த சீரியல் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்றதில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.