ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக மகாலட்சுமி வேடத்தில் நடித்திருந்தவர் நிவேதா தாமஸ். குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் ரசிகர்களின் மனதில் நின்றவர். ஜில்லா படத்திற்கு பின் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்த அவர் மூன்று வருடங்கள் தெலுங்கு சினிமாவில் இருந்து வந்தார்.
இவர் பின் கடந்த ஆண்டு ஜனவரியில் வந்த தர்பார் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் தெலுங்கு படங்களில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தற்போது கூட நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். டிவிட்டரில் வீடியோ ஒன்றை Re Tweet செய்துள்ளார்.
இந்த பதிவில் ராஜப்பன் என்ற முதியவர் தினமும் படகில் Vembanad ஏரியில் விசை படகில் சென்று குப்பையாக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து ஏரியை சுத்தப்படுத்தி வருவதையும், பல வருடங்களாக அவர் இந்த சேவையை செய்து வருவதையும் தெரியப்படுத்தியுள்ளார்.
அவரின் வீடியோவை அரசு அதிகாரிகள், மற்றும் சமூக நல ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர் பகிர்ந்து வருகின்றனர்.
Meet NS Rajappan. He cannot walk as he is paralysed below his knees. Uses his hands to move around. Everyday Rajappan gets into his small boat & collect plastic bottles from Vembanad lake. All alone. From last many years. Let’s make him famous. @thebetterindia pic.twitter.com/uDhXIzAHI7
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 2, 2021