விஜயின் யூத் படத்தில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா? இப்போது இவரும் முன்னணி நடிகர்! யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் அவர்கள் இவர் ஆரம்ப கால கட்டத்தில் பட வாய்ப்புகளுக்கு காத்திருந்து பல படங்கள் நடித்துள்ளார். அவ்வாறு நடித்து வெளியான படம் தான் யூத். இந்த படம் 2002ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா என்பவரால் இயக்கி வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.

இந்த படத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் விஜய். இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள். விவேக், மணிவண்ணன், விஜயகுமார், ஷஹீன் கான் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படமானது வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஒருவர். ஆம் இந்த நடிகர் நடராஜன் சுப்பிரமணியம் தான். இவர் பல படங்களுக்கு சினிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் நடிகராக களம் இறங்கி சதுரங்க வேட்டை படம் மூலம் பல ரசிகர்களை தான் வசப்படுத்தினார். இவர் நடிகர் விஜய்  அவர்கள் நடித்து வெளியான புலி, துப்பாக்கி படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

நடிகர் நடராஜ் சுப்பிரமணியம் அவர்கள் யூத் படத்தில் ஒரு காட்சியில் கடையில் பேப்பர் வாங்கும் கஸ்டமராக வந்து இருப்பார். இதே போல் மிஸ்கின் அவர்களும் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.