வாய்ப்பு ஒன்னும் சும்மா கிடைக்கவில்லை.. அதற்காக என்ன செய்தேன் தெரியுமா? உண்மையை உடைத்த சூரரைபோற்று நடிகை அபர்ணா பாலமுரளி

வைரல் வீடீயோஸ்

கொரானா வைரஸால் சினிமா தியேட்டர்கள் திறக்காமல் பல படங்கள் பெண்டிங்கில் இருந்து வருகிறார். தற்போது வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் தியேட்டர்களை திறக்கப்பட்டுவிட்டன.

கடந்த 8 மாதங்களாக இப்படி இருந்த நிலையில் சில முன்னனி நடிகர் நடிகைகளின் படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வந்தன. தற்போது நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படமும் அமேசான் பிரைமில் வெளியாகி பல நேர் எதிர் விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். நடிகை அபர்ணா பாலமுரளி, படத்தின் அனுபங்கள் பற்றி கூறி வருகிறார்.

8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லையாம்.

அதற்காக ஏகப்பட்ட ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் பாஸ் ஆன பிறகு தான் சுதா அபர்ணா பாலமுரளியை பொம்மியாக செலக்ட் செய்துள்ளார். இதனை சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.