வாயில் ஜொல்லு வடிய குழந்தைகள் போல் பால் பாட்டிலில் பால் குடிக்கும் மூன்று குரங்குக் குட்டிகள்! வைரல் வீடியோ காட்சி.

வைரல் வீடீயோஸ்

குழந்தைகள் போல் பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குகளின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Flotsam&Jetsam Diaries என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 2 நிமிடம் 19 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில் மூன்று குரங்குகள் குழந்தைபோல் பால் டப்பாவில் பால் குடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியை இதுவரை பல ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் தண்ணீர் நிரப்பிய பால் பாட்டிலில் பால் பவுடரை கலந்து பால்போல் மாற்றுகிறார். இதனிடையே பால் குடிப்பதற்காக தயாராக இருக்கும் மூன்று குரங்குகள், குழந்தைகள் போல் உடை அணிந்து அவர் எப்போது அந்த பால் பாட்டிலை தருவார் என சேட்டை செய்துகொண்டிருக்கிறது.

இறுதியில் அந்த பெண் பால் டப்பாவை கொடுத்ததும் மூன்று குரங்குகளும் தரையில் அமர்ந்து, குழந்தை போல் பால் குடிக்கிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி. நீங்களும் பாருங்கள்.