வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து வந்து குவியும் போட்டோ, வீடியோக்களை எப்படி செல்போனில் சேவ் ஆகாமல் தடுக்கலாம்? பயனுள்ள தகவல்!

செய்திகள்

வாட்ஸ்அப் செயலி உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருந்துவருகிறது. செய்திகளைப் பகிர்வதில் வாட்ஸ் ஆப்பின் பயன்பாடு மிக முக்கிய ஒன்றாக இருந்துவருகிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டை ஒரு நாளுக்கு பலமுறை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம்.

வாட்ஸ் ஆப்பில் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊர் சொந்தங்கள் என பல க்ரூப்கள் வாட்ஸ் ஆப்பில் வைத்திருப்பார்கள். இதனால் நாம் வாட்ஸ் ஆப் பயண்படுத்தாவிட்டாலும், க்ரூப்பில் அனுப்பப்படும் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் நாம் மீண்டும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி அவற்றை பார்க்கும்பொழுது அது நமது செல்போன் கேலரியில் சேமித்துவிடும். ஒரு சிலருக்கு இவற்றை டெலிட் செய்வதே ஒரு வேலையாக இருக்கும். இதனால் பலர் குரூப்பை விட்டு கூட வெளியேறுவார்கள்.

இனி யாரும் குரூப்பிலிருந்து  வெளியேற தேவை இல்லை. வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கேலரி நிரம்பி சி ரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அ ழிக்க வேண்டியுள்ளது. இனிமேல் அந்த க வலை வேண்டாம்.

இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மட்டும் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம்.

இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கேலரியில் சேமிக்கப்பட மாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.

இப்படி செய்தால் போதும் எதுவும் உங்கள் போனில் சேவ் ஆகாது. உங்களுக்கு வேண்டியதை ,மட்டும் நீங்கள் சேவ் செய்து கொள்ளலாம்.