வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்தியேன் செய்யும் மிகப் பெரிய உதவி! குவியும் பாராட்டுகள்!!

வைரல் வீடீயோஸ்

வடிவேலு பாலாஜி உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தி டீர் நெ ஞ்சுவ லி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உ யிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையின் அலட்சியமே அவரின் ம ரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்

அது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரின் நெருங்கிய திரைப்பிரபலங்கள், நண்பர்கள் யாரும் உதவ வரவில்லை, உறவினர்கள் தான் தங்களிடம் இருந்த பணத்தை வைத்தே அவருடைய மருத்துவ சிகிச்சையை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்தியேன், வடிவேலு பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் கல்விக்கான செலவை தானே கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இது குறித்து KPY இயக்குனர் தாம்சன் கூறுகையில், சிவகார்த்திகேயன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், பாலாஜியின் ம றைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், மறைந்த நடிகர் பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதாகவும் உறுதியளித்ததாக கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு திருமணத்தில் பாலாஜியைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டதாக சிவா கூறியதாக தாம்சன் தெரிவித்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் சிவகார்த்திகேயனுக்கு சமூகவலைத்தளங்களில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.