ராகு – கேது பெயர்ச்சியில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எட்டு என்ன? என்ன பரிகாரம் ??

ஆன்மிகம்

ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

ஆவணி மாதம் 16ம் நாள், செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.16 மணிக்கு நடைபெறவிருகின்றது.

அந்தவகையில் ராகு – கேது பெயர்ச்சியில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள், எட்டு நட்சத்திரங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பரிகாரம் செய்யும் ராசிகள் என்ன?
 1. மேஷம்
 2. ரிஷபம்
 3. மிதுனம்
 4. கடகம்
 5. துலாம்
 6. விருச்சிகம்
 7. தனுசு
 8. மகரம்

மேஷ ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரர்கள், கடக ராசிக்காரர்கள், துலாம் ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மகர ராசிக்காரர்கள் முதலானவர்கள், இந்த ராகு – கேது பெயர்ச்சி நாளில், ராகு பகவானையும் கேது பகவானையும் வழிபடுங்கள்.

பரிகாரம் என்ன?
 • ராகு பகவான் திருத்தலம், கேது பகவான் திருத்தலம் முதலான தலங்களில் அர்ச்சனை செய்துகொள்ளுங்கள்.
 • வீட்டுக்கு அருகில் இருக்கும் புற்று கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
 • புற்றுக்கு மஞ்சள் தூவுங்கள். மலர் தூவுங்கள். பால் வார்த்து வேண்டிக்கொள்ளுங்கள்.
பயன்கள் என்ன?
 • சர்ப்ப தோஷம் நீங்கும்.
 • கால சர்ப்ப தோஷம் நீங்கி, கல்யாணத் தடைகள் அகலும்.
 • வாழ்வில் இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.