ராகு கேது பெயர்ச்சியால் திடீர் மாற்றம்… ஆட்டி படைக்கும் கிரகங்கள்…!!

ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதைப் போல அரசியல் தலைவர்களும் ஆவலுடன் இந்த ராகு கேது பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ இருக்கிறது.

இந்த கிரகப்பெயர்ச்சியால் மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்,அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்களில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன்.

அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். இரவோடு இரவாக ஒரு ஆண்டி திடீரென அரசனாவதற்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்கும் காரணம் சர்ப கிரகங்களே. யானை மாலை போட்டு அரசனாக தேர்வு செய்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மூலம் முதல் ரேவதி வரையில் உள்ள நட்சத்திரங்களில் பிறந்த எந்த அரசியல் கட்சி தலைவர்களை அரியணையில் அமர வைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மூலம்:

தனுசு ராசியில் உள்ளது மூலம் நட்சத்திரம். கேதுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லைதான். எச்சரிக்கையாக இருங்க. உங்களைப் பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுத்திருப்பாங்க. இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு பின்னர் நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.

பூராடம்:

பூராடம் நட்சத்திரம் சுக்கிரன் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் கட்சி தலைமையை அனுசரித்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் எதிர்கட்சியின் ஆள் என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள்.

வரும் தேர்தலில் சீட்டுக்காக நிறைய அலைய வேண்டியிருக்கும். சில நேரங்களில் கட்சியில் புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உத்திராடம்:

சூரியனின் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கட்சியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும்.

தேர்தல் நேரத்தில் உங்களுக்கு நேரம் ஒர்க்அவுட் ஆகும்.

திருவோணம்:

சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலும், மனச் சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைப் பாதிப்பதாக இருக்கும். கட்சி தலைமையிடம் சிறு பிரச்சினைகள் உண்டாகும். ஆனாலும் உங்களுக்கு சீட் கன்பார்ம் கவலைப்படாதீங்க.

அவிட்டம்:

செவ்வாயின் நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை ஏற்படும். எச்சரிக்கையாகவும் கவனமாகவும் பேசுவது நல்லது. உங்க பேச்சே உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளது.

சதயம்:

ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது நல்லது. இந்த ராகு கேது பெயர்ச்சி வீண் அலைச்சலை தரும் கட்சித் தலைமையிடம் நல்ல பேர் வாங்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்க நேர்மை உங்களை பாதுகாக்கும்.

பூரட்டாதி:

குருவின் நட்சத்திரமான பூராட்டாதியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சின்னச் சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. ஆசைப்பட்டு எதிர்முகாமில் காலடி எடுத்து வைத்து விட்டு அப்புறம் அவஸ்தை படாதீங்க. எதையும் ஆக்கபூர்வமாக யோசித்து முடிவு பண்ணுங்க மனத் தெளிவு வரும்.

உத்திரட்டாதி:

சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியம் அதிகம். உங்களைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகள் சாமர்த்தியமாக செயல்படவும். திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ரேவதி:

புதனின் நட்சத்திரம் ரேவதி புத்திசாலித்தனமும், நிதானமும் கொண்டவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள். அவசரப்பட்டு வாக்குறுதிகளை தவிர்த்து விடவும். தொண்டர்களின் ஆதரவும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கட்சித்தலைமையின் ஆதரவும் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.