ராகு கேது பெயர்ச்சியால் 2020 ல் 27 நட்சத்திரங்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்க போகுது என தெரிந்துக்கொள்ளலாம்..??

ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நிகழ உள்ளது.

திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ இருக்கிறது.

 

இந்த கிரகப்பெயர்ச்சியால் 27 நட்சத்திரங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என பார்ப்போம்.

அசுவினி:

மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.

இந்த ராசியில் உள்ள அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்கள் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் பிரச்சினை தலைதூக்கும் சற்று கவனமுடன் செயல்படவும்.

தலைமையுடன் நெருக்கம் அதிகரிக்கும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பரணி:

மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.

இந்த ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இந்த கிரகப்பெயர்ச்சியால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எந்த பிரச்சினை என்றாலும் அடக்கி வாசிக்கவும்.

கார்த்திகை:

மேஷம் ரிஷபம் ராசிகளில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில பிரிவுகள் வரலாம், புதிய உறவுகள் தேடி வரலாம்.

உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனம் தேவை.

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவது ஆபத்தானது. அரசியல் சந்நியாசம் போக வேண்டி வந்து விடும்.

ரோகிணி:

ரிஷபம் ராசியில் ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகப்பெயர்ச்சியால் ரோகிணியில் பிறந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு புதிய கூட்டணிகள் கை கொடுக்கும்.

புதிய முயற்சிகளை தயக்கமின்றிச் செய்யலாம். உங்களின் நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் பிரச்சினை நீங்கும்.

மிருகஷீரிடம்:

மிருகஷீரிடம் அற்புதமான நட்சத்திரம். இந்த ராகு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தலைமையிடம் விசுவாசமாக நடந்து கொண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும்.

திருவாதிரை:

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் ராகு சஞ்சரித்த சமயத்தில்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது.

இப்போது ராகு இடப்பெயர்ச்சியாகி ரிஷபத்திற்கு நகர்வதால் அரசியல் கட்சியினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.

மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். திடீர் பணவரவும் லாபமும் கிடைக்கும்.

புனர்பூசம்:

ராகு கேது பெயர்ச்சி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில நன்மைகளை தரப்போகிறது.

கட்சியின் மேலிடத்தலைவர்களின் பார்வையால் புதிய பதவிகள் தேடி வரும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மக்கள் செல்வாக்கு கூடும்.

பூசம்:

கடகம் ராசியில் உள்ள பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

நட்பு வட்டாரம் விரிவடையும். கட்சி தலைமையிடம் மதிப்பும் மரியாதையும் தேடி வரும்.

ஆயில்யம்:

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கூட்டணி விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

மகம்:

மகம் ஜெகத்தை ஆளும் என்பார்கள். மகத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பெயர், புகழ், கௌரவத்தை தேடி கொடுக்கும் என்றாலும் மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாகவே மாறும்.

கட்சியிலும் மக்கள் மத்தியிலும் உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.

பூரம்:

தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. மக்கள் மத்தியில் புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள்.

முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பதவிகளும், பட்டங்களும் தேடி வரும்.

உத்திரம்:

சிம்மம் ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

புகழும் செல்வாக்கும் கிடைக்கலையே என்ற மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.

மன தைரியம் கொண்ட நீங்கள் அரசியலில் ஜெயிக்க புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ஹஸ்தம்:

கன்னி ராசியில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கட்சி தலைமையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

சந்திக்க நேரிடலாம். இந்த சந்திப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

சித்திரை:

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் அதிக கவனத்தோடும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டியிருக்கும்.

இதன் மூலமே பதவியும் பட்டங்களும் தேடி வரும். திடீர் உதவிகள் வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். பேச்சில் நிதானம் தேவைப்படும் காலகட்டமாகும்.

சுவாதி:

துலாம் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிரிகளின் தொல்லைகளை எகிறி அடிப்பீர்கள்.

எத்தகைய இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியசாலிகள் நீங்கள் என்பதால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

விசாகம்:

 

இந்த ராகு கேது பெயர்ச்சியால், எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.

அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.

பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம்:

விருச்சிகம் ராசியில் உள்ள அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சந்தோஷத்தை கொடுக்கும்.

இதுநாள் வரை கட்சி மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

தலைமையின் குட்புக்கில் இடம் பெறும் அளவிற்கு நல்ல காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பதவிகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேட்டை:

விருச்சிகம் ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு நீங்கள் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்படுவது அவசியம்.

சில நேரங்களில் நினைத்தது நடக்காமல் காரியத் தடைதாமதம் ஏற்படும். இழுபறியாகவும் இருக்கும். கட்சித்தலைமையின் கவனத்தை கவர உங்களின் செயல்பாடுகளில் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.

மூலம்:

தனுசு ராசியில் உள்ளது மூலம் நட்சத்திரம். கேதுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லைதான்.

எச்சரிக்கையாக இருங்க. உங்களைப் பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுத்திருப்பாங்க.

இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு பின்னர் நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.

பூராடம்:

பூராடம் நட்சத்திரம் சுக்கிரன் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் கட்சி தலைமையை அனுசரித்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் எதிர்கட்சியின் ஆள் என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள்.

வரும் தேர்தலில் சீட்டுக்காக நிறைய அலைய வேண்டியிருக்கும். சில நேரங்களில் கட்சியில் புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உத்திராடம்:

சூரியனின் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கட்சியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும்.

திருவோணம்:

சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலும், மனச் சோர்வும் உண்டாகும்.

மேலிடத்தின் செயல்கள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைப் பாதிப்பதாக இருக்கும். கட்சி தலைமையிடம் சிறு பிரச்சினைகள் உண்டாகும். ஆனாலும் உங்களுக்கு சீட் கன்பார்ம் கவலைப்படாதீங்க.

அவிட்டம்:

செவ்வாயின் நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.

எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை ஏற்படும். எச்சரிக்கையாகவும் கவனமாகவும் பேசுவது நல்லது. உங்க பேச்சே உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளது.

சதயம்:

ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது நல்லது.

இந்த ராகு கேது பெயர்ச்சி வீண் அலைச்சலை தரும் கட்சித் தலைமையிடம் நல்ல பேர் வாங்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்க நேர்மை உங்களை பாதுகாக்கும்.

பூரட்டாதி:

குருவின் நட்சத்திரமான பூராட்டாதியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சின்னச் சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள்.

இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. ஆசைப்பட்டு எதிர்முகாமில் காலடி எடுத்து வைத்து விட்டு அப்புறம் அவஸ்தை படாதீங்க. எதையும் ஆக்கபூர்வமாக யோசித்து முடிவு பண்ணுங்க மனத் தெளிவு வரும்.

உத்திரட்டாதி:

சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியம் அதிகம். உங்களைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகள் சாமர்த்தியமாக செயல்படவும். திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ரேவதி:

புதனின் நட்சத்திரம் ரேவதி புத்திசாலித்தனமும், நிதானமும் கொண்டவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல்வாதிகள். அவசரப்பட்டு வாக்குறுதிகளை தவிர்த்து விடவும்.

தொண்டர்களின் ஆதரவும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கட்சித்தலைமையின் ஆதரவும் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.