ராகு – கேதுவின் ஆட்டத்தால் புதிய வைரஸ் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..! ஜாக்கிரதை…! எப்போது கொரோனா விலகும் தெரியுமா..? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஆன்மிகம்

இந்த ஆண்டு தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சார்வரி ஆண்டுக்குரிய இடைக்காட்டுச் சித்தரின் வருஷாதி பாடல் இது.

தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு”

இதில் ஆரம்ப பாடலிலேயே 18 ஜாதிகளும் நோயில் அவஸ்தைப்படுவார்கள். மழை இல்லை, பூமி விளையாது, மற்றவர்கள் பாதுகாப்பு இல்லாமல் உயிரிழக்க நேரிடும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பாடல் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதில் ஜாதி எனக் குறிப்பிடப்படுவது நம் ஊரில் கூறுவது போல வகையிலானதல்ல. இந்த இடத்தில் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இனங்கள் மற்றும் வெவ்வேறு மக்களை குறிப்பிடுகின்றது என்பதன் பொருளாகும்.

மேலும் கொரோனா தீவிரமாகப் பரவுவதற்கு ஜோதிட கோள்களின் அடிப்படையில் என்ன காரணங்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

காரணங்கள்:

மேலும் 12 ராசிகளில் தனுசு வீடு மற்றும் மீன வீடு ஆகியவை குருவின் வீடுகளாகும். இந்த வீடுகள் மிகவும் சுபத்துவம் வாய்ந்ததாகவும். ஆன்மிக தொடர்புடையவையாகவும் விளங்குகின்றன.

ராகு அல்லது கேது சனியுடன் இந்த வீடுகளில் நெருக்கமாக இணையும் காலகட்டங்களில் பொதுவாக இத்தகைய அமைப்புகளில் பிறந்தவர்கள் நாத்திகர்களாகக்கூட இருப்பார்கள். சனியுடன் ராகு அல்லது கேது இணையும்போது நோய்க் கிருமிகளால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த சார்வரி ஆண்டில் தனுசு வீட்டில் சனி மற்றும் கேது ஆகிய கோள்கள் நெருக்கமாக இணைந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவுதலுக்கு இவை முக்கிய காரணமாக உள்ளது.

இந்த நோய்த் தொற்று எப்போது விலகும்:

தற்பொழுது குரு வக்கிர கதி முடிந்து தனுசு வீட்டிற்குள் சென்று விட்டது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ராகு, கேது ஆகிய இரு கோள்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது.

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி. தனுசு வீட்டை விட்டு நகர்ந்து விருச்சிகத்துக்கு கேது சென்று இவை சனியின் சேர்க்கையிலிருந்து விடுபடுகிறது. மேலும் இதேபோல் ராகு மிதுனத்திலிருந்து வெளியேறி ரிஷபத்திற்கு செல்கிறது.